தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் திருமணமண்டபத்தில் தருமபுரி மாவட்ட இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பளராக நாஞ்சில்சம்பத் கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் பேசினார். மாநில சுயாட்சி என்ற தலைப்பில் அமுதரசன் பேசினார். நிகழ்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பரமணி தலைமை தாங்கினார், முன்னால் அமைச்சர் பழனியப்பன், பிரபுராஜசேகர், மோகன்ராஜ், கீரை விஸ்வநாதன், மதிவாணன் உள்ளிட்ட மாவட்ட திமுக நிர்வாகிகள், திமுக இளைஞரணியினர் கலந்து கொண்டனர்.

