தமிழகத்தில் முதல் முறையாக தருமபுரியில் மாநில அளவில் நடைபெற்ற டேக் வாண்டு க்யோருகி மற்றும் ஃபூம்சே சாம்பியன்ஷிப் 2022 விளையாட்டு போட்டி மூன்று நாட்கள் தருமபுரி மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஜீனியர்/சப் ஜீனியர்/கேடட் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. அங்குள்ள வீரர்கள், பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களை அனைவரையும் மை தருமபுரி அமைப்பின் தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்தனர்.
இந்த போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினராக மை தருமபுரி சதீஸ் குமார் அவர்கள் கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை தமிழ் நாடு டேக் வாண்டு அசோசியேஷன் தலைவர் திரு.சாக்ரடீஸ், செயலாளர் திரு.சித்தேஸ்வரன், துணை தலைவர் திரு.பரணிதரன், திரு.சுரேஷ் குமார் அவர்கள் ஒருங்கிணைத்தனர்.

