கிரேஸ்ட் இந்தியா அறக்கட்டளை, மருதம் நெல்லி கல்வி நிறுவனங்கள், ஈக்குவடாஸ் வங்கி மற்றும் அரிமா சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (30.07.2022) இண்டூர் அருகே அமைந்துள்ள மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 1700க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
5ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பை பெறலாம் என நிகழ்ச்சி ஏற்பட்டார்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்வினை தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. S.P.வெங்கடேஸ்வரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கிவைக்க உள்ளார், நாளை மாலை 4 மனியளவில் முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு தருமபுரி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மரு. இரா. செந்தில் மற்றும் ஈக்குவடாஸ் நிறுவன செயல் இயக்குனர் திரு. ஜான் அலெக்ஸ் அவர்களும் பணி நியமன ஆணையை வழங்குகிறார்.
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த வேலை நாடுவோர் இந்த முகாமில் பங்குபெற்று வேலைவாய்ப்பினை பெற கேட்டுக்கொள்கிறார்கள், முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் பின்வரும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களை பெறலாம். 7010977900 / 8754542234 / 8560808937.


