தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டச் செயலாளர் தனுஷன் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மாவட்ட செயலாளர் குமார் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மாவட்ட குழு உறுப்பினர் வஞ்சி, சேகர் மற்றும் தீர்த்தகிரி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர், இதனை தொடர்ந்து வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, வருமானமின்மை போன்றவற்றால் வாழ வழி தெரியாமல் திணரும் அப்பாவி மக்கள் மீது வரி விதிப்பு செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் அரிசி, கோதுமை, பருப்பு, மாவு, வெல்லம், தயிர், மோர்உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருள்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பை வாபஸ் பெறக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கின்ற நிலையில் மக்களை வதைக்கும் இந்த வரிகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.

