Type Here to Get Search Results !

கிடப்பில் போடப்பட்ட சாலை திட்டம், விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை.

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த பெரியப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிக்களூர் கிராமம் முதல் புதுக்காடு வரையிலான தார் சாலை அமைக்க ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட நிதி திட்டத்தில் 2018-19 ஆண்டில் இந்த  பணிகள் தொடங்கப்பட்டது, இதில் 3 கிலோமீட்டர் தூரம் வரை தார் சாலை அமைக்க 148.30 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் துவங்கின. 

அதற்காக ஜல்லி மற்றும் மண் ஆகியவற்றை கொண்டு கொட்டி சாலையை சமன் செய்தனர். ஆனால் எனோ தெரியவில்லை, அத்தோடு பணிகள் திருத்தப்பட்டது, தற்போது இரண்டு ஆண்டுகாலமாக இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது ஜல்லி மற்றும் மண் ஆகியவை பெயர்த்து கொண்டு வருகிறது. 

இது குறித்து அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டபோது, இந்த பணிக்கான ஒப்பந்தம் எடுத்த மேச்சேரியை சார்ந்த ஆறுமுகம் என்பவர் இந்த பணியை செய்யமுடியாயில்லை என இந்த பணியை கைவிட்டுவிட்டார் என கூறினார்.

இந்த சாலை வழியாக தான் சிக்களூர் அரசினர் உயர் நிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும், அந்த பகுதியில்  குடியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் இப்பகுதி மாணவர்கள் செல்லும் பள்ளி வேன் ஆகியவை இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.

ஆகவே இந்த சாலையை உடனடியாக சீர்செய்து தார் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி திமுக கிளை கழக செயலாளர் வினோத் குமார் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், உடனடியாக இந்த சாலையை அமைத்து கொடுக்க அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies