தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டாநூலஅள்ளியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரின் மகன் பிரகாஷ் (17), பிரகாஷ் ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். பிரகாஷுக்கு சில மாதங்களுக்கு முன் வயிற்றுவலி காரணமாக வயிற்றில் அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.
இந்நிலையில் அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இதனால் இவருடைய பெற்றோர் உனக்கு ஏன் அடிக்கடி வயிற்று வலி வருகிறது என திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனையடைந்த பிரகாஷ் வீட்டிற்கு உள்ளே சென்று மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், உடனடியாக தகவல் அறிந்த அதியமான் கோட்டை காவலர்கள் பிரகாஷின் பிரேதத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

