காரிமங்கலம் அடுத்த பெரியமுரசுபட்டியை சேர்ந்த விவசாயி பரமசிவம், தனது விவசாய பணிகளுக்காக டிராக்டர் வாங்குவதற்காக வீட்டில் இருந்த தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூ 2.50 லட்சம் தொகையை பெற்றர், அதை தனது இருசக்கரவாகனத்தில் வைத்துவிட்டு அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிட சென்றார்.
சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது டூவீலரில் வைக்கப்பட்டிருந்த ரூ 2.50 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், அவர் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
அப்போது அருகில் உள்ள நகைக்கடை சிசிடிவி கேமரா கட்சியை ஆய்வு செய்ததில் மூன்று பேர் கொண்ட கும்பல் பரமசிவத்தை பின் தொடர்ந்து வந்து டூவீலரில் இருந்த பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது, இது புகார் தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட திருட்டு கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

