இதன்படி, தருமபுரி மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளினையொட்டி பேச்சுப்போட்டி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு 28.07.2022 அன்று முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டிகளில் அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/-, மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.
மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாகத் தொகை ரூ.2000/- வீதம் வழங்கப்பெறவுள்ளது. இது தொடர்பில் கீழ்நிலை அளவில் முதன்மைக் கல்வி அலுவலரால் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு மாவட்ட அளவில் நடைபெறும் இந்த போட்டிக்கு 25 பேர் கொண்ட மாணாக்கர்கள் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படவுள்ளது.
எனவே பள்ளி மாணாக்கர்களுக்கான இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ/ மாணவிகள் உரிய வட்டாரக் கல்வி அலுவலர்களையோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையோ தொடர்பு கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

