மாரண்டஅள்ளி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட கடைகள் மற்றும் ஹோட்டல்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரை கனி மற்றும் பாலக்கோடு உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபாலன் ஆகியோர் இணைந்து மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட கடைகள் அனைத்திலும் சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது மளிகை கடைகள், ஹோட்டல் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களில் பார்சல் கட்டி கொடுத்ததை பார்த்து கடைகளில் சோதனையிட்டதில் சுமார் 100 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கவர்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் வாழைப்பழம் மண்டி,டீக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் சோதனை செய்த பொழுது எத்தியோப்பின் என்ற விச மருந்தை தெளித்து வாழைப்பழங்கள் விற்பனை செய்வதை கண்ட அதிகாரிகள் சுமார் 200 கிலோ எடை கொண்ட வாழைப்பழத்தார்களை எடுத்துச் சென்று குழி தோண்டி புதைத்தனர்.
மேலும் சீல் இடப்படாத தண்ணீர் கேன்கள்,குளிர் கலர் பானங்கள் உள்ளிட்டவைகளை சாக்கடையில் கொட்டி அளித்தனர். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகள் மீது ரூபாய் 10,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
மேலும் இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி பார்சல் செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலப்பட பொருட்கள் பயன்படுத்தும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

