நிகழ்ச்சிக்கு இதழின் ஆசிரியர் இரா சரவணகுமார் தலைமை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பெண்ணாகரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் சி.மாதையன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து, வரலாறு, அறிவியல், சிறுகதை, கவிதை, அறிவு பெட்டகம் என அனைத்து சமூக கருத்துக்களையும் தாங்கி வெளிவரும் செங்காந்தள் இதழ் ஆலமரம் போல் படர்ந்து செழித்தோங்கி வளர வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து பதிப்பின் முதல் பிரதியை பெண்ணாகரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் சி.மாதையன் வெளியிட முனைவர் த ஞானசேகர், முனைவர். ஜெகநாதன், மற்றும் எழுத்தாளர் ரவி ஆகியோர் பெற்று கொண்டனர். வெளியீட்டு ஆசிரியர் வெ.மணிகண்டன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் இல. தர்மராஜா நன்றியுரை ஆற்றினார்.