தர்மபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், சிட்லிங் ஊராட்சிக்குட்பட்ட மலை கிராமமான காரப்பாடி மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள 48 வீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் இன்று (11.06.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மலைவாழ் மக்களிடம் கலந்துரையாடினார்கள்.
அருகில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.இரா.விஸ்வநாதன், பழங்குடியினர் நல மாவட்டத் திட்ட அலுவலர் திரு.கதிர் சங்கர், அரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.இரவிச்சந்திரன், சிட்லிங் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.வி.மாதேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.