தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சங்கம்பட்டி ஊராட்சியில் உள்ள ஏரியில் கடந்த சில மாதங்களாக புதிய ஆறு வழி சாலைக்கு புலிகரை சங்கம்பட்டி ஏரியில் அரசு அனுமதித்த அளவை விட சுமார் பத்து மடங்கு மேலாக ஏரி மண் அனுமதியை மீறி திருட்டுத்தனமாக ஏரியில் பல மடங்கு மண் எடுத்துக்கொண்டு வருகின்றனர், என ஊர் மக்கள் குற்றச்சாட்டு தற்பொழுது ஏரி இருக்கும் நிலை மாறி குவாரி போல் காட்சியளிக்கிறது.
குறிப்பாக இப்பகுதியில் உள்ள ஏழை எளிய விவசாய மக்கள் பருவ காலங்களில் கரும்பு நெல் தக்காளி சிறுதானிய காய்கறிகள் போன்றவை பயிரிடப்பட்டு வந்த நிலையில் தற்போது விவசாய கிணற்றில் நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது இந்த நிலை தொடர்ந்தால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவ்வளவும் ஏற்படும் அரசு VAO அதிகாரிகளிடம் பல முறை முறையிடும் கண்டு கொள்ளவில்லை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாய ஊர் மக்கள் கோரிக்கை ஏற்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் ஊர் மக்கள் வேண்டுகோள்.
- தகடூர் குரல் செய்திகளுக்காக பாலக்கோடு செய்தியாளர் வேலு.