Type Here to Get Search Results !

என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு பேரணி.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க  தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி சார்பில் பேரூராட்சி தலைவர் மாரி செயல் அலுவலர் (பொறுப்பு) கலைராணி, தலைமையில் என் குப்பை என் பொறுப்பு, என்கிற தலைப்பில்  பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய  விழிப்புணர்வு பேரணியை பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி துவக்கி வைத்தார் . அதற்கு முன்பு பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி துணை தலைவர் ரவி ,மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், செயல் அலுவலர் அலுவலக பணியாளர்கள் தன்னார்வு தொண்டு நிறுவன உறுப்பினர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு என் நகரம் என் பெருமை என் நகரத்தை தூய்மையாகவும் சுத்தமாக வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்பும் ஆகும் மேலும் பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே நகர தூய்மைக்கான முதல் காரணம் என்பதை நான் நம்புகிறேன்.

நான் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட மாட்டேன் யாரையும் குப்பைகளை கொட்ட அனுமதிக்க மாட்டேன் ,என உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.   அதனை தொடர்ந்து இப்பேரணி பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம், கடைவீதி, மாயபஜார், பிள்ளையார்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பேரூராட்சி பணியாளர்கள் விதி விதியாக சென்று சாலைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் குப்பை கொட்ட கூடாது, பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும் மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை தனியாகவும் சேகரித்து அவற்றை தினசரிி வீடு தோறும் வரும் பேரூராட்சிி தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன இப்பேரணி இறுதியாக பேரூராட்சி அலுவலகத்தில் முடிவு பெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies