Type Here to Get Search Results !

மாரண்டஹள்ளி பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி பேரூராட்சி அலுவல வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார்.

இதில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி வீடுகள், விற்பனை வளாகங்கள் தொழில் நிறுவனங்கள் மட்டும் உணவகங்கள் தோறும் நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து மறுசுழற்சிக்குரிய பொருட்களை தயாரிக்கவும், மக்கும் கழிவுகளை தனியாகவும் கையாண்டு இயற்கை உரமாக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மாரண்டஹள்ளி பேரூராட்சியில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனி தனியாகவும், ஈரக் கழிவு, உலர்கழிவு, மின்கழிவு மற்றும் அபாயகரமான கழிவுகளை பிரித்து தினசரி தங்களை தேடி வரும் பேரூராட்சி தூய்மை காவலர்களிடம் வழங்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகளை பயன்படத்தினால் அபராதம் விதிக்கப்படும், அதற்கு மாறாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். கடைகள், உனவகங்கள், மீன், இறைச்சி கடைகளுக்கு செல்லும் போது, துணிப்பை, தூக்கு பாத்திரம் கொண்டு செல்ல வேண்டும், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாக பொதுமக்களுக்கு மஞ்சப்பை இலவசமாக விநியோகம் செய்து மாரண்டஹள்ளி பேரூராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து நகரத்தின் இராயக்கோட்டை ரோடு, நான்கு ரோடு,பஜார் வீதி வழியே சென்று பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று கோஷமிட்டு, பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக்கனி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உதவி பொறியாளர் லாவண்யா, உதவியாளர் தங்கதுரை, மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மகேந்திரன் மற்றும் கல்லூரி மாணவர்கள், சுகாதார ஆய்வாளர் சண்முகம் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், சமுதாய ஒருங்கிணைப்பாளர் லாவண்யா மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள், மாரண்டஅள்ளி காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் குமார், அரிமா சங்கம் மற்றும் வணிகர் சங்கம் சார்ந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies