பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தினகரன் முன்னிருந்து கொடியசைத்து தொடங்கின நகரப்புற 18 வார்டு முழுவதும் எனது குப்பை எனது பங்களிப்பு சிறப்பு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது, எனது குப்பை எனது பங்களிப்பு முகாமில் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், ஊர் பொதுமக்கள், மற்றும் மகளிர் மன்ற பிரதிநிதிகள், பங்குகொண்டு என் நகரம் என் பெருமை என் நகரத்தை தூய்மையாகவும் சுத்தமாக வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்பும் ஆகும் மேலும் பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே நகர தூய்மைக்கான முதல் காரணம் என்பதை நான் நம்புகிறேன் நான் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட மாட்டேன் யாரையும் குப்பைகளை கொட்ட அனுமதிக்க மாட்டேன், என உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து இப்பேரணி பாலக்கோடு நகர் முழு வதும் உள்ள அனைத்து வீதிகளிலும் குப்பைகள் அகற்றும் தூய்மை பணியில் ஈடுபட்டனர் இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, பேரூராட்சி துனை ஆய்வாளர் ரவீந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் தாஹின இதயாத்துல்லா மற்றும் பேரூர் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்றனர்.
