தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கழிவுநீர் கால்வாய் உடன் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி வார்டு எண் 8யில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம் 21-22யின் கீழ் கழிவுநீர் கால்வாய் உடன் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட கழக செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே.பி அன்பழகன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளா் செந்தில்குமாா், ஒன்றிய மாணவரணி செயலாளா் ரவிசங்கா், நகர செயலாளா் காந்தி, மாவட்ட கவுன்சிலா் காவோி, வழக்கறிஞா் பாரதி,தகவல் தொழில்நுட்ப பிாிவு நகர செயலாளா் கௌதம், ஒப்பந்ததராா் நந்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.