இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் மழையின் காரணமாக இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பீதியில் வீடுகளில் முடங்கியிருந்த நிலையில், அன்று இரவும் சிறுத்தை கிராமத்திற்குள் வந்து கோழியை தூக்கி சென்றுள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் பணிகளுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, எந்த இடத்தில் பதுங்கி உள்ளது என்பதை கண்காணிக்க, நேற்று வனவர் முனுசாமி தலைமையில் வனத்துறையினர்.
சிறுத்தை பதுங்கி உள்ள காவேரியப்பன் கொட்டாய், எருதுகுட்டஹள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள காப்புகாடுகளில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். ஆனால் சிறுத்தை தென்படாததால், பாறை இடுக்குகளில் பதுங்கி இருக்கலாம் என வனத்துறையினர் தொடர்ந்து வனப்பகுதியை சுற்றிலும் ரோந்து சென்று வருகின்றனர். ஆனால் சிறுத்தை வனத்துறையினர் கண்ணில் படாமல் சுற்றி வருகிறது.