தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர் இக்கல்லூரிக்கு பாலக்கோடு, காரிமங்கலம், அனுமந்தபுரம், மாரண்டஅள்ளி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, அகரம், பந்தாரஹள்ளி அடிலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து மாணவிகள் கல்லூரியில் அனைத்து பாடப் பிரிவுகளும் உள்ளதால் ஆர்வத்துடன் வந்து பயின்று வருகின்றனர் கல்லூரி நிர்வாகத்தால் நடத்தப்படும் சிற்றுண்டி (கேண்டின்) உணவு மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் மதிய உணவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை வைத்து மாணவிகளுக்கு உணவு விநியோகிக்கப் படுவதால் பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் கேன்சர் போன்ற கொடியநோய் தாக்குதலால் மாணவிகள் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான நிலை உள்ளது. தமிழக அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை முழுமையாக பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தும் கல்லூரி நிர்வாக சீர்கேகேட்டாலும் மாவட்ட ஆட்சியரின் மெத்தன போக்காலும் கல்லூரி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் தங்குதடையின்றி புழங்கி வருகிறது.
எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.