டேராடூன், ஜூலை 1 –
அவர்களில் தருமபுரியைச் சேர்ந்த ஸ்ரீ விஜய் வித்யாஷிரம் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இ.நலேஷ் என்ற மாணவன், முதன்முறையாக தேசிய போட்டியில் பங்கேற்று அரை இறுதி வரை முன்னேறியுள்ளார். முன்னதாக ஹரியானாவில் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் இ.நலேஷ் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று தேசிய போட்டிக்குத் தேர்வாகியிருந்தார்.
இ.நலேஷின் பெற்றோர் G.இளையராஜா மற்றும் K.ராதிகா கூறுகையில், “ஐஸ் ஸ்கேட்டிங் ஒரு ஒலிம்பிக் தர விளையாட்டு. நமது மகன் இந்தப் போட்டியில் அரை இறுதி வரை சென்றது பெருமை அளிக்கிறது. வரவிருக்கும் போட்டிகளில் பதக்கம் வென்று தருமபுரிக்கு இன்னும் பெருமை சேர்க்க நிச்சயம் கடினமாக பயிற்சி எடுப்போம்” எனக் கூறினர். மேலும், ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் மற்ற மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்து தங்களது திறமையை வெளிப்படுத்தி மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.