போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வினை திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகியும் நடத்தி முடிக்காமல் காலம் தாழ்த்துவது கண்டித்து ஊதிய உயர்வினை உடனே நடத்தி முடிக்கவும் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அதேநாளில் பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுாி அடுத்த பாரதிபுரத்தில் தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன வாயிற் கூட்டம் போக்குவரத்து பிாிவு மண்டல செயலாளர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கண்டன கூட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வினை உடனடியாக திமுக அரசு நடத்தி முடிக்க வேண்டும் எனவும் ஊதிய உயர்வினை வழங்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அதேநாளில் பண பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். கண்டன கூட்டத்திற்கு போக்குவரத்து பிரிவு மாநில இணைச் செயலாளர் அன்பு மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கோவிந்தசாமி, உள்ளிட்டோர் சிறப்புரையாற்றி கண்டன கோஷங்களை எழுப்பினா்.
இந்நிகழ்ச்சியில் மண்டல செயலாளா் சிவன், நகர செயலாளா் பூக்கடை ரவி, கூட்டுறவு ஒன்றிய தலைவா் பொன்னுவேல், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.