தருமபுரி மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட இணைச்செயலாளர் தேன்மொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
- 01-01-2022 முதல் 3 சதவீத அகவிலைபடியினை ரொக்கமாக வழங்கிடுக!
- மறு உத்தரவு வரும்வரை முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈடு செய்யும் விடுப்பினை ஒப்படைத்து பணப்பலன் பெறும் உரிமையைமீண்டும் வழங்கிடுக!
- தி.மு.க வின் தேர்தல் கால வாக்குறுதிபடி புதிய ஒய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுதிடுக!
- முன்னால் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் அவர்களின் தற்காலிக பணிநீக்கத்தை இரத்து செய்து ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக வழங்கிடுக.
போன்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர், ஆர்பாட்டத்தில் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் பைரோஸ்கான், இராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.