நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கீதா வரவேற்று பேசினார், தமிழ் துறை தலைவர் செந்தில்குமார், இயற்பியல் துறை தலைவர் ஜெயசீலன், கணினி அறிவியல் பயன்பாட்டு துறை தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவிகள் மொபட்டில் செல்லும் போது முறையாக பயிற்சி எடுத்து கொண்டு ஓட்டினால் விபத்துக்களை தவிர்க்கலாம், கல்லூரி அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.
சாலை விதிகளை கடைப்பிடிப்பதில் நமக்கும் பொறுப்பு உண்டு என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்.மேலும் வாகனத்தை இயக்கும் நபர்கள் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிய வேண்டும் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான அபராதம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
சாலை பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு பதில் கூறிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் பேராசிரியர்கள், என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக கல்லூரி இரண்டாமாண்டு மாணவி இளவரசி நன்றி தெரிவித்தார்.