தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் பற்றி விவாதம் நடைபெற்றது.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் வழங்க தொகை.
- ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள பரிசல் துறையில் சுங்கம் வசூலிக்கும் உரிமை காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு.
- ஜெயம் பொறியியல் கல்லூரியில் தடுப்பூசி தற்காலிக சிகிச்சை மையம் அமைக்க மின்சாதன பொருட்கள் மற்றும் தற்காலிக கழிவறைகள் அமைப்பது.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றின் ஆழமான பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை ஒகேனக்கல் தனியார் வாகன நுழைவு கட்டணம் மற்றும் வாகனம் நிறுத்த கட்டணம் அறிவிப்பு பலகை வைத்தது.
- மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நடைபாதை அக்ரிமெண்ட் செய்து வைக்கப்பட்டிருந்த கடைகளை கிரேன் மற்றும் ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
- எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் நரசிம்மரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு அமைப்பாளர் பணி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து காசி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்தும் இன்னும் பல திட்டங்களை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.