தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாப்பம்பாடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற 55 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டிற்கு பிறகு கோயில் திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார், 3 கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தும், பூ-கரகம் எடுத்தலும். பக்தர்கள் 10 முதல் 16 அடி நீளமுள்ள அலகு குத்தி, தீ சட்டியை தலையில் சுமந்து கொண்டும் மாரியம்மனுக்கு 80 மேற்பட்ட சேவல்களை, பலியிட்டும் நேர்த்தி சிலர் கோயிலில் அங்க பிரதஸ்னம் செய்து நேரத்தி கடன் செலுத்தினர்.
கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன, இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக