மாவட்ட பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 மே, 2022

மாவட்ட பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம்.

பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரி  மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பாட்டாளி இளைஞரணி மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை வரவேற்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் வன்னியர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி அவர்கள் தலைமை தாங்கினார் .இந்த கூட்டத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி‌ வெங்கடேஸ்வரன் அவர்கள் பேசுகையில் கொரனோ நோய்த்தொற்றுக்கு பிறகு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க வரும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிப்பது தொடர்பாக பேசினார்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் செந்தில், மற்றும் பாரிமோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுசாமி, பாமக மாநில துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, வன்னியர் சங்க செயலாளர் அரசாங்கம், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், பாட்டாளி இளைஞர்  சங்கத்தைச் சார்ந்த முருகசாமி, பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா இராமகிருஷ்ணன், நல்லம்பள்ளி ஒன்றிய குழு பெருந்தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, மற்றும் தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், இளைஞர் சங்க நிர்வாகிகள், பசுமைத்தாயகம், மாணவரணி, வன்னியர் சங்கத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் பாமக கிழக்கு  மாவட்ட செயலாளர் பி.வி. செந்தில் அவர்கள் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad