முன்னதாக கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் முனைவர் இராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து சிறப்புரையாற்றிய ஆர்.வி.எஸ் வணிக மேலாண்மை கல்லூரி இணைப்பேராசிரியர் கிறிஸ்டோபர் சேவியர் பேசுகையில், மாணவர்கள் தங்களது கல்லூரி பருவத்திலேயே வேலைவாய்ப்புக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாக அனைவருக்கும் தொழில்நுட்பத்தின் அவசியமும், பயன்பாடும் தெரிந்திருக்க வேண்டும். கைப்பேசி, மடிக்கணினி போன்ற தொழில்நுட்பங்களை சரியான முறையில் பயன்படுத்தி தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
போட்டி நிறைந்த இந்த உலகில் வேலைவாய்ப்பு என்பது தனது திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்பவர்களுக்கே சாத்தியமாக அமைகிறது. ஆகையால் மாணவிகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதில் தனி கவனம் செலுத்துதல் வேண்டும். மற்றும் கணினி எண்ணியல் துறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்றவற்றின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்து மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் இம்முகாமில் ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் சுப்பிரமணிய குமார், ஆங்கில துறை உதவி பேராசிரியர் பழனிசாமி, நிர்வாக அலுவலர் அருள்குமார், அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியாக கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் முனைவர் அமுதா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக