பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மலையனூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது, இந்த கடை பகுதியில் தினமும் குடிமகன்கள் கூட்டம் அலை மோதும் பெண்கள் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சென்று வருவதில் பெரும் சிரமம் இருந்து வருவதாகவும் ஆண்கள் வேலைக்குச் செல்லாமல் மதுபானக்கடையை அருகிலேயே இருந்து வருவதாகவும் இதனால் தங்கள் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு குடும்பம் நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் கூறி 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென கடை முன்பு கூடி கடை திறக்க கூடாது என முற்றுகையிட்டனர்.
இதனால் மதுபான கடை திறக்க முடியாமல் ஊழியர்கள் செய்வது அறியாது திகைத்து நின்றனர் இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அதன்பேரில் காவல் ஆய்வாளர் லதா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர், 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையினர்அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து பேச்சுவார்த்தையில் தற்போது வரை ஈடுபட்டுவருகின்றனர்
கடை மூடும் வரை தாங்கள் இங்கிருந்து செல்ல போவதில்லை என கூறி போராட்டத்தை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் பெண்கள் இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் அப்பகுதியில் மதுபானக் கடை எப்போது திறக்கும் என்ற ஏக்கத்தில் 20க்கு மேற்பட்ட ஆண்கள் ஏக்கத்துடன் கடை அருகில் அமர்ந்து இருப்பதை காணமுடிகின்றது.

