Type Here to Get Search Results !

50 ஆண்டுகளாக குடியிருந்த வீட்டை இடித்த அதிகாரிகள்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பல்லேன அள்ளி கிராமத்தில் அரசு ஆலம்பாடி நாட்டு மாடு ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது, அதனையொட்டி உள்ள 96 ஏக்கர் அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை மேம்படுத்தி கால்நடைகளுக்கான உணவு மற்றும் மேய்ச்சலுக்கு  நிலத்தை பயன்படுத்த முடிவு செய்து அங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்த மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்காமல் வலுக்கட்டாயமாக வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியதால் மாற்று இடம் இல்லாமல் ஆடு, மாடு, வளர்ப்பு நாய் மற்றும் உணவு தாணியங்களுடன் வெட்ட வெளியில் பொருட்களுடன் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர்.

மேலும் இடிக்கப்பட்ட வீடு மத்திய அரசு வழங்கும்  பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.70 இலட்சம் ரூபாயில் கட்டப்பட்டதாகவும், இதற்காக அதிகாரிகள் 40 ஆயிரம் ரூபாய் இலஞ்சமாக பெற்றதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

வட்டார வளர்ச்சி அலுவலகம், வருவாய்த் துறை, மின்சாரத் துறை இனைந்து மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் உள்ள கிணறு, வீடுகளுக்கு பட்டா, சிட்டா, மின் இனைப்பு, ஏரி வேலை உள்ளிட்டவைகளை வழங்கி விட்டு தீடீரென்று இப்படி வீட்டை இடித்து நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies