சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அரசு ஊழியர்கள் அனைவரும் பலன்பெறும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தருமபுரி மாவட்டம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாப்பாரப்பட்டியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் சட்ட மன்றத்தில் நிதி அமைச்சர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என்று ஏளனமாக அரசு ஊழியர்கள் பற்றி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.இதில் 20 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அடுத்த கட்ட போராட்டம் ஊழியர் விரோத சிபிஎஸ் திட்டத்தை இரத்து செய்ய கோரி 26-5-22 அன்று மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் தர்ணா போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்

