தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி நூலகம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான சிறப்பு வழிகாட்டுதல் பயிற்சிப் பட்டறை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் கார்த்திகேயன் அவர்கள் முன்னிலை வகித்து பேசும்போது: போட்டிகள் நிறைந்த உலகத்தில் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பொழுது அதற்கான திறனை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் இதில் நாமக்கல் சிவிக்ஸ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் தினேஷ் பழனியப்பன் மாணவர்களிடையே டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். சரியான திட்டமிடலும் நேர நிர்வாகம் மற்றும் முறையான பயிற்சியும் இருந்தால் மாணவர்கள் அரசு தேர்வுகளை சுலபமாக எதிர்கொள்ளலாம் என்று கூறினார்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் கல்யாணி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.