மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு திருவிழா நடைபெற்றன, நிகழ்வில் மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் க.கோவிந்த் தலைமை வகித்தார்.
கல்லூரி இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் ஹேமாவதி அவர்கள் வரவேற்று பேசினார், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சா.எழிலன் முன்னிலையுரை வழங்கினார். கல்லூரி நிர்வாக மேலாளர் ரா கணேஷ் நோக்கவுரை வழங்கினார். கல்லூரி துணை முதல்வர்களான முனைவர் சி.காமராஜ், முனைவர் சி.தமிழரசு, முனைவர் அ.இம்தியாஸ் வாழ்த்துரை வழங்கினார்கள்.
வேதியியல் துறைத்தலைவர் மா.பாலாஜீ விளையாட்டுத்துறை சார்ந்து கருத்து பகிர்வு வழங்கினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் க.கோவிந்த் பதக்கம், வெற்றி கோப்பை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். நிறைவாக கல்லூரி விளையாட்டு துறை இயக்குநர் ஆர்.சி கார்த்திக் நன்றி கூறினார்.