தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பொம்மஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் துணி வியாபாரி சிவக்குமார் (35) இவர் கடந்த புதன்கிழமையன்று தாயாருக்கு மருத்துவம் பார்க்க வீட்டைப் பூட்டிவிட்டு சென்னை சென்று இன்று அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. மேலும் பிரிட்ஜ், பருப்பு டப்பா என மாற்று இடத்தில் வைத்திருந்த 7 சவரன் தங்க நகையை திருடன் தவறிவிட்டது தெரியவந்தது.
இந்த திருட்டு குறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்.பொதுமக்கள் தயவு கூர்ந்து பீரோவில் துணி மட்டும் வையுங்கள் மாற்று இடத்தில் நகைகளை வைப்பதன் மூலம் திருடனை திசை திருப்ப முடியும் என்று காவல் கண்காணிப்பாளர் தினகரன் அவர்கள் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார். இரவு வீட்டின் பூட்டை உடைத்து நகை, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.