பாலக்கோடு, ஆக. 8 | ஆடி 23
பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அன்றிரவு நடைபெற்ற ஆடல்–பாடல் நிகழ்ச்சியின் போது, அதே பகுதியை சேர்ந்த சுசீந்திரன் (23) மற்றும் ஞானசுந்தரம் (27) ஆகியோருக்கு இடையில் தகராறு ஏற்பட்டது.
தகராறின் போது, சுசீந்திரன் தன் கையில் இருந்த பீர் பாட்டிலால் ஞானசுந்தரத்தின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஞானசுந்தரம் தலையில் காயமடைந்து இரத்தம் சிந்தி வலியுடன் அலறினார். இதை தடுக்க வந்த பிரபு என்பவரையும் சுசீந்திரன் அதே பீர் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஞானசுந்தரம் மற்றும் பிரபு ஆகியோர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஞானசுந்தரம் அளித்த புகாரின் பேரில், பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.