கோடை காலம் துவங்கிய நிலையில் தமிழகத்தில் மக்களின் தாகம் தீா்க்க தண்ணீா் பந்தல் திறந்து மக்களின் தாகம் தீா்க்க அதிமுக ஒருங்கிணைப்பாளா்கள் அறிவுறுத்தினாா். அதனையடுத்து தருமபுாி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒடசல்பட்டி, கடத்தூா், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் அரூா் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூா் ரவுண்டனா, மொரப்பூா் உள்ளிட்ட பகுதிகளிலும் முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலாளா் கே.பி.அன்பழகன் தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தாகம் தீா்க்க மோா், தா்பூசணி, இளநீரை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினா்கள் கோவிந்தசாமி, சம்பத்குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிாிவு செயலாளாா் கோவிந்தசாமி நகரம் ஒன்றியம் என பலா் உடனிருந்தனா்
.gif)

