Type Here to Get Search Results !

தந்தையை வெட்டி கொலை மகன் உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த எருதுகூடஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன் (வயது .75 ) இவருக்கு, 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவரது மனைவி முனியம்மன், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இறந்ததால் மகள் நாகம்ம்மாள்  வீட்டில் வசித்து வந்தார். முனியப்பனுக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலத்தில், மகள்களுக்கு சொத்தை பிரித்து கொடுக்க முயன்றுள்ளார். இதற்கு அவரது மகன் கட்டிட மேஸ்திரியான மாது (வயது. 44) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

அதனையும் மீறி   1 ஏக்கர் நிலத்தை வேறு நபருக்கு விலை பேசி 1 இலட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாது மற்றும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளிகளான தனது உறவினர்களான மாரியப்பன் (வயது .33), பெருமாள் (வயது.42), மாதையன் (வயது.42) ஆகியோருடன் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம்  23ம் தேதி   மதியம் வீட்டில் இருந்த தந்தை முனியப்பனை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிசென்றனர்.

தகவல் அறிந்த மாரண்டஅள்ளி  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து   4 பேரையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் ஜாபர் குற்றவாளிகள் 4 பேர் மீதும் குன்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies