இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி பாப்பாரப்பட்டி வாரச்சந்தையில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 கடைகள் கட்டப்பட உள்ளது. சந்தை குறித்து முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உடனடியாக பணியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இரண்டாவது அலகு 4600 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது. இதற்கான திட்ட அறிக்கைகள் தயாராகி வருகிறது.
இத்திட்டம் நிறைவேறும் பொழுது தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டகளில் உள்ள நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து கிராமங்களுக்கும் குடியிருக்கும் நாள்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஜி.கே.மணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைதலைவர் பாடி செல்வம், தொகுதி அமைப்பு செயலாளர் சுதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செல்வகுமார் பாமக நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ராஜா உலகநாதன், கோவிந்தசாமி, பேரூராட்சி தலைவர் பிருந்தா மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
.gif)

