பாலக்கோடு, மே.18:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் புலிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2004ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நேற்று நடைபெற்றது. 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
விழாவில் மறைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே. சுரேஷ், ஜி. சிங்காரவேல், கே. சாந்தமூர்த்தி மற்றும் முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)