ஏரியூர், மே.18:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வரும் நந்தகுமார், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக பதவி ஏற்றதற்காக நெருப்பூர் முத்தையன் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்ததுடன், பென்னாகரம் தொகுதியில் கஜேந்திரன் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தனது வேண்டுதல் நிறைவேறியதாக கூறி ஏரியூர் ஒன்றிய செயலாளர் நந்தகுமார் கோயிலில் தலையை மொட்டை அடித்து வழிபாடு செய்தார். மேலும், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தவெக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா, பென்னாகரம் எம்எல்ஏ கஜேந்திரன், தொகுதி பொறுப்பாளர் ரஞ்சித் குமார், ஒன்றிய நிர்வாகிகள் நரசிம்மன், விக்ரம், தர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)