வருடத்தில் இரண்டு நாட்களில் மட்டுமே சூரியன் மிகச்சரியாக நம் தலைக்கு மேலே வரும். அந்த இரண்டு நாட்களில் மட்டுமே நிழல் முழுவதுமாக மறையும். மற்ற நாட்களில் நண்பகலில் கூட வடக்கு திசையில் அல்லது தெற்கு திசையில் சிறிய நிழல் விழும். இந்த இரண்டு நிழலில்லா நாட்களில் கூட கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் வரும், அதற்கு அப்பால் துருவப்பகுதி வரை சூரியன் தலைக்கு மேலே வரவே வராது.
இப்படிப்பட்ட ஒரு அதிசய நாளான இன்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் எலந்தகொட்டப்பட்டி அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் இரவிந்தர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சோதனை செய்து காட்டினார் இதனை பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்கள் ஆர்வமாக கண்டுகளித்தனர்.