தருமபுரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பிரிவு 27(1) ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குட்பட்டு இந்த திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பு அதிகாரியாக திரு.கா.தவ்லத் பாஷா என்பவர் கடந்த 04/04/2022-ம் தேதி முதல் தருமபுரி மாவட்டத்தில் பொறுப்பேற்றுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று 30 நாட்களுக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார். பிரச்சனை நடக்கும் இடத்திலேயே விசாரணை நடத்தலாம். பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல் தொடர்பான பிரச்சனைகள் உட்பட குறைகள் மீதும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
மேலும் தங்களது புகார்களை குறைதீர்ப்பாளர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், தரை தளம் தருமபுரி என்ற முகவரிக்கு மனுக்களாகவும் அனுப்பலாம். எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் தருமபுரி மாவட்டத்தின் குறை தீர்ப்பு அதிகாரி திரு.தவ்லத் பாஷா என்பவரை கைப்பேசி எண் 9787666959 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் கூறியுள்ளார்.