தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்காவிற்க்குட்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில் நீர் தேக்கத் தொட்டியை இன்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி திறந்து வைத்தார்.
மேலும் முக்கரெட்டிப்பட்டி பகுதி வாழ் மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை அதன் அடிப்படையில் மக்களுக்கு பயன் பெறும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.6.50 இலட்சம் மதிப்பிட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பூமி பூஜை செய்து வைத்தார், உடன் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய கவுன்சிலர் சதாசிவம், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
.gif)

