இந்நிகழ்ச்சியினை கானொலி காட்சியின் வாயிலாக விவசாயிகளும் பொதுமக்கள் காண்பதற்காக பாலக்கோடு கோட்ட மின் வாரியம் மூலம் காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி ஆகிய பகுதியில் உள்ள தனியார் மண்டபம் மற்றும் பள்ளியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது, இந்நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் திருமதி வனிதா அவர்கள் தலைமை வகித்தார்.
காணொளிக் காட்சி மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளிடம் நடைப்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியினை விவசாயிகள் கண்டு மகிழ்ந்தனர்.
மேலும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர், இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சங்கர் குமார், உதவி பொறியாளர்கள் அருள்குமார், அருணகிரி, மோகன் குமார், ரமேஷ், மாதேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் மனோகரன், பெரியாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், தின்டல் ஊராட்சி மன்ற தலைவர் உமாகுப்பராஜ், முக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ண பெருமாள், கோவிலூர்ஊராட்சி மன்ற தலைவர் நந்தீஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை கண்டுகளித்தனர்.
.gif)

