Type Here to Get Search Results !

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் வணிகவியல் (கணினி பயன்பாட்டு) துறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா.


தருமபுரி, செப்டம்பர் 30:
 


தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் வணிகவியல் (கணினி பயன்பாட்டு) துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வணிகவியல் (கணினி பயன்பாட்டு) துறையில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்லூரி வாழ்க்கை, நல்லொழுக்கம் மற்றும் கல்வி சார்ந்த நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


மேலும், வணிகவியல் (கணினி பயன்பாட்டு) பாடப்பிரிவை படிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் அப்பாடப்பிரிவின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் ப. வே. சாரதி மற்றும் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கோ. பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.


மேலும், வணிகவியல் (கணினி பயன்பாட்டு) துறைத் தலைவர் முனைவர் சபீர் முகம்மது மற்றும் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சி தொடர்பான அறிவுரைகளையும் வழங்கினர். நிகழ்ச்சியில் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி கிருத்திகா வரவேற்புரை வழங்கினார். இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர் கோகுல் மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி சூரியகலா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இறுதியில் மூன்றாம் ஆண்டு மாணவர் வெங்கடாத்திரி நன்றி உரையாற்றினார்.


தொடர்ந்து மாணவர்களுக்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் வணிகவியல் (கணினி பயன்பாட்டு) துறையைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் மற்றும் பிற மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று, அவர்களுக்கு கல்வி மற்றும் கல்லூரி வாழ்க்கை குறித்த வழிகாட்டுதல்களை வழங்கிய இந்நிகழ்ச்சி, மாணவர்களிடையே உற்சாகத்தையும் புதிய கல்வியாண்டுக்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies