தமிழ் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்களில் அன்னார்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசு விழாவாகக் கொண்டாட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை வளர்த்திட அரும்பாடுபட்ட தமிழறிஞர்கள், தமிழகத்தை உயர்த்திட தம் ஆயுளையே அர்ப்பணித்தார்கள். நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டு தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளை பெருமைப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வேறு மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், இன்றைய தினம் 16.04.2022 சனிக்கிழமை தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி (சித்திரை முழுமதி - சித்திரை முழு நிலவு நாள்) - கடையேழு வள்ளல்களில் ஒருவரான, அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. சு. அனிதா அவர்கள் கலந்துக்கொண்டு வள்ளல் அதியமான் அவர்களின் திருவுருவ சிலைக்கும், அவ்வையார் அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத்தொடந்து பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி. அன்பழகன் அவர்கள், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.க. மணி அவர்கள், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி அவர்கள், அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் ஆகியோர் வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தடங்கம் பி. சுப்பிரமணியம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஜி. சேகர், தருமபுரி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமதி. எம். யசோதா, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி.பி. மகேஸ்வரி, அதியமான் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.எம். மாரியம்மாள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.பெருமாள், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.மு.ஷகிலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மு.அண்ணாதுரை, அதியமான் கோட்டை ஊராட்சி செயலர் திரு.திருவருட்செல்வன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
.gif)

