Type Here to Get Search Results !

தருமபுரியில் மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


தருமபுரி, செப்டம்பர் 30:
 


தருமபுரி மாவட்ட மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில், தருமபுரி மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அருள்நாதன் தலைமை வகித்தார்.


மின்வாரியத்தின் மின் கணக்கீட்டுப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கக் கூடாது, தனியாருக்கு ஒப்படைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், மின் இணைப்பு கணக்கீட்டுப் பணியில் நிலவும் ஆட்பற்றாக்குறையை சமாளிக்க, ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு பணியாளர்களை நியமிக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் கோகுல்தாஸ், ஆனந்தன், முருகன், பாண்டியன், டேவிட், சண்முகம், ராமன், அழகேசன் உள்ளிட்ட ஏராளமான ஒப்பந்தப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மின்வாரியப் பணிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், பணியாளர் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies