Type Here to Get Search Results !

மோட்டார் சைக்கிள் மீது சொகுசு கார் மோதல்: கணவன், மனைவி படுகாயம் – மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை.


தருமபுரி:
 


தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். பாப்பாரப்பட்டி அருகே உள்ள திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்த கேசவன் (28) மற்றும் அவரது மனைவி பிரியா (24) ஆகியோர் ஓசூரில் வசித்து வருகின்றனர். கேசவன் கிரேன் ஆபரேட்டராகவும், பிரியா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், உறவினரின் சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இருவரும் தங்களது சொந்த ஊரான திருமல்வாடிக்கு வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர், கடந்த 22ஆம் தேதி மீண்டும் ஓசூர் செல்வதற்காக கேசவன் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி பிரியாவுடன் புறப்பட்டுள்ளார். அவர்கள் மகேந்திரமங்கலம் அருகே சீங்கேரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சொகுசு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.


இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கேசவன் மற்றும் பிரியா இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies