Type Here to Get Search Results !

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை.


தருமபுரி, செப்டம்பர் 30:
 


தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2026 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் பதக்கங்கள் மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.


மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில், தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.


மாணவிகள் பிரிவு

மாற்றுத்திறனாளிகள் பிரிவில், இரண்டாம் ஆண்டு தமிழ் துறை மாணவி எம். மௌனிகா, செவித்திறன் குறைபாடுடையோர் பிரிவில் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் ஆகிய இரு போட்டிகளிலும் முதலிடம் பெற்றார். மாணவிகள் குழு விளையாட்டுப் போட்டிகளில் கபடியில் முதலிடமும், பூப்பந்தில் இரண்டாம் இடமும், கூடைப்பந்தில் மூன்றாம் இடமும் பெற்றனர்.


கேரம் போட்டியில் இரண்டாம் ஆண்டு B.Sc. ஃபேஷன் டெக்னாலஜி மாணவி எம். ரூபினி முதலிடம் பெற்றார். நீச்சல் போட்டியில், III B.Sc. வேதியியல் துறை மாணவி எஸ். கவிப்பிரியா, 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் முதலிடம் பெற்றார். 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவி எம். வசந்தி இரண்டாம் இடம் பெற்றார். இறகுப்பந்து ஒற்றையர் பிரிவில், M.Sc. முதலாம் ஆண்டு வேதியியல் துறை மாணவி எஸ். சுமித்ரா இரண்டாம் இடமும், முதலாம் ஆண்டு B.Com. CA மாணவி எஸ். வைஷ்ணவி மூன்றாம் இடமும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் எஸ். சுமித்ரா – எஸ். வைஷ்ணவி இணை இரண்டாம் இடம் பெற்றது.


மாணவர்கள் பிரிவு

மாற்றுத்திறனாளிகள் பிரிவில், M.A. முதலாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவர் எஸ். கிரி முருகன், மனவளர்ச்சி குறைபாடுடையோர் பிரிவில் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் ஆகிய இரு போட்டிகளிலும் முதலிடம் பெற்றார். மாற்றுத்திறனாளிகள் பிரிவு இறகுப்பந்து போட்டியில் மூன்றாம் ஆண்டு BBA மாணவர் டி.ஆர். தரணிஷ் மூன்றாம் இடம் பெற்றார்.


குழு விளையாட்டுகளில் கைப்பந்தில் முதலிடமும், வாலிபாலில் இரண்டாம் இடமும், கபடி அணியில் இரண்டாம் இடமும், கால்பந்தில் மூன்றாம் இடமும் பெற்றனர். சதுரங்கப் போட்டியில் மூன்றாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவர் எம். விஜயராகவன் இரண்டாம் இடம் பெற்றார்.


இறகுப்பந்து ஒற்றையர் பிரிவில், மூன்றாம் ஆண்டு இளம் அறிவியல் தாவரவியல் துறை மாணவர் எஸ். தீபக் விக்னேஷ் இரண்டாம் இடம் பெற்றார். இரட்டையர் பிரிவில் சி. மாதேஸ்வரன் மற்றும் எஸ். தீபக் விக்னேஷ் இணை முதலிடம் பெற்றது.


நீச்சல் மற்றும் சிலம்பம்

நீச்சல் போட்டிகளில், II M.Sc. விலங்கியல் துறை மாணவர் எஸ். நாசர், 100 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டிகளில் முதலிடம் பெற்றார். மூன்றாம் ஆண்டு கூட்டுறவுத் துறை மாணவர் ஆர். நாகேந்திரன், 200 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக்கில் இரண்டாம் இடமும், 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக்கில் மூன்றாம் இடமும் பெற்றார். கூட்டுறவுத் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் கே. பிரசாத், 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார். சிலம்பப் போட்டியில், BBA மூன்றாம் ஆண்டு மாணவர் கே. சபரி, 55 முதல் 65 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் பெற்றார்.


அரசு ஊழியர்கள் பிரிவு

அரசு ஊழியர்கள் பிரிவில், கல்லூரி உதவியாளர் பெ. மாதேஷ் குண்டு எறிதலில் முதலிடம் பெற்றார். இயற்பியல் துறையைச் சேர்ந்த ரேணுகா பரமேஸ்வரி கேரம் போட்டியில் முதலிடம் பெற்றார். மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் பதக்கங்கள் மற்றும் தகுதிச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.


நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) மருத்துவர் எம். பாலசுப்ரமணியம் மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் பொறுப்பு சி. லவிஷா ஆகியோர் கலந்து கொண்டு, விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.


மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க உறுதுணையாக இருந்து பயிற்சி அளித்த முனைவர் கு. பாலமுருகன் அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சாதனை படைத்த மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன், என்சிசி அலுவலர் முனைவர் ஏ. தீர்த்தகிரி, அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்தினர்.


தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பதக்கங்களை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies