பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து மஞ்சவாடி செல்லும் தடம் எண் 4 அரசு பேருந்து காலை 8 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இந்த பேருந்து வரலக்ஷ்மி மில் அருகே சென்றபோது, தனியார் பேருந்து ஒன்று இந்த அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றது, அப்போது எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து அரசு பேருந்தை உரசி சென்றது. இதில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் சேதமடைந்து சரிந்து விழுந்தது, இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை, இது குறித்து பாப்பிரெட்டிபட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.