தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஊசி போடும் சிரஞ்சில்,சாக்லேட் நிரப்பி விற்பனை செய்யப்படுவதாக பத்திரிக்கைகள் ஊடகங்களில் வந்த தகவலின் அடிப்படையில் நேற்று தர்மபுரி நகரில் ஆய்வு செய்து ஒரு சில கடைகளில் அவ்வகையான சிரஞ்ச் சாக்லேட்கள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.அதன் தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு துறையினர் இன்று காரிமங்கலம் மற்றும் பெரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட்கள், மிட்டாய் வகைகள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் மொத்த விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
இன்று 10- க்கும் மேற்பட்ட கடைகளின் ஆய்வில், சிரஞ்ச் சாக்லேட்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை, ஆனால் ஒர் மொத்த விற்பனை கடையில் சிறுவர்கள் சிறு வயதிலே புகைபிடித்தல் மற்றும் போதை வஸ்து உபயோகத்தலை மனதில் விதைக்கும் விதமாக சிறுவர்களை கவர்வதற்கு ஹீக்கா என்ற பெயரில் உரிய தயாரிப்பு முகவரி மற்றும் உபயோக முடிவு தேதி இல்லாத ஹீக்கா வஸ்து உபயோகிக்கும் உபகரணம் போன்ற குடுவையுடன் பைப் வடிவில் சீரக மிட்டாய்கள் நிரப்பிய குப்பிகள் 40 எண்ணிக்கை கொண்ட 2 ஜார்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.