தருமபுரி, ஆகஸ்ட் 16 | ஆடி 31 –
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மை தருமபுரி அமைப்பினர் முன்னாள் ராணுவ வீரர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து கௌரவித்தனர். தருமபுரி அரசு மருத்துவமனைக்கு எதிரில் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் “பசிக்குதா வாங்க சாப்பிடுங்க” உணவு சேவை திட்டத்தில், முன்னாள் ராணுவத்தினருக்கு இனிப்பு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ராணுவ வீரர்கள் அவில்தார் ஜான் பேட்ரிக் ஹென்றி மற்றும் நாயக் கோவிந்தராஜ் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம், அமைப்பாளர்கள் கிருஷ்ணன், சையத் ஜாபர், செந்தில், தன்னார்வலர்கள் குணசீலன், கணேஷ், வள்ளி தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.